கவிதை

வெள்ளி, 23 டிசம்பர், 2011

நினைவு நாடாக்கள்



நினைவுநாடாக்கள்



பேருந்து பயணத்தின் 

முன்னிருக்கை ஜோடிகள்

அவளின் நினைவுகளை

தென்றளாக தீயாக

தீண்டாமல் விலகுவதில்லை





ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2011

அலுவலகத்தில் மனித உறவுகளில் விரிசல்கள் ஏற்படாமல்

அலுவலகத்தில் மனித உறவுகளில் விரிசல்கள் ஏற்படாமல்
1.தானே பெரியவன் தானே சிறந்தவன் என்ற அகந்தையை விடுங்கள்
2.அர்த்தமில்லாமலும் தேவையில்லாமலும் பின் விளைவுகள் அறியாமலும் பேசிக்கொண்டேயிருப்பதை விடுங்கள்
3.எந்த விஷயத்தையும் பிர்ச்சனையயும் நாசுக்காகக் கையாளுங்கள் 4.சில நேரங்களில் சில சில சங்கடங்களை சகித்துதான் ஆக வேண்டும் என்று உணருங்கள்.
5.நீங்கள் சொன்னதே சரி, செய்ததே சரி என்று கடைசி வரை வாதாடாதீர்கள்.
6.குறிய மன்ப்பான்மையை விட்டொழிங்கள்.
7.உண்மை எது, பொய் எது என்று வ்சாரிக்காமல் இங்கே கேட்டதை அங்கே சொல்வதையும் அங்கே கேட்டதை இங்கே சொல்வதையும் வ்ட்டுவிடுங்கள்.
8.மற்றவர்களைவிட உங்களையே எப்போதும் உயர்த்தி நினைத்து கர்வப்படாதீர்கள்.
9.அளவுக்கதிமாக தேவைக்கதியமாய் ஆசைப்படாதீர்கள். 10.எல்லோரிடத்திலும் எல்லா விஷயங்களையும் அவ்ர்களுக்கு சம்பந்தம் உண்டோ இல்லையோ சொல்லிக்கொண்டிருக்காதீர்கள். 11.கேள்விப்படுகிற எல்லா விஷ்யங்களையும் நம்பி விடாதீர்கள். 12.அற்ப விஷயங்களையும் பெரிதுபடுத்தாதீர்கள்.
13.உங்கள் கருத்துக்களில் உடும்புப் பிடியாய் இல்லாமல் கொஞ்சம் தளர்த்திக்கொள்ளுங்கள்.
14.மற்றவர் கருத்துக்களை செயல்களை நடக்கின்ற நிகழ்ச்சிகளைத் தவறாகப் புரிந்து கொள்ளாதீர்கள்.
15.மற்றவர்களுக்கு உரிய மரியதையைக் காட்டவும் இனிய இதமான சொற்களை பயன்படுத்தவும் தவறாதீர்கள்.
16.புன்முறுவல் காட்டவும் சிற்சில அன்புச் சொற்களை சொல்லவும் கூட நேரமில்லாதது போல நடந்து கொள்ளாதீர்கள். 17.பேச்சிலும் நடத்தையிலும் திமிர் தனத்தையும் தேவையில்லாத மிடுக்கையும் காட்டுவதை தவித்து அடக்கத்தையும் பண்பாட்டையும் காட்டுங்கள்.
18.அவ்வப்போது நேரில் சந்தித்து மனம் திறந்து அளவளாவுங்கள். 19.பிணக்கு ஏற்படும்போது அடுத்தவர் முதலில் இறங்கி வரவேண்டும் என்று காத்திருக்காமல் நீங்களே பேச்சை துவக்க முன்வாருங்கள்.
20.தேவையான இடங்களில் நன்றியையும்,பாராட்டையும் சொல்ல மறக்காதீர்கள்.பாராட்டுக்கு மயங்காத மனிதனே இல்லை,அதுவே உங்களுக்கு வெற்றியாக அமையும்.

புதன், 13 ஜூலை, 2011

கதைகளம்

1. இலக்கியம் :

மனித சமுதாயத்தின் அகத்தையும் - புறத்தையும் காட்டும் நிலைக்கண்ணாடி இலக்கியம். அது ஒரு குறிப்பிட்ட காலத்தில் மனித வாழ்க்கையை பிரதிபலிக்கின்றது.

மனித சமுதாயம் இலக்கியக் கண்ணாடியின் வழியாகத் தன் உள்ளத்திற்கு மகிழ்வையும் - அழகையும் தேடிக் கொள்கின்றது.

2. சொல் - எழுத்து :

"சொல்தான் மனிதன்".....கருத்தின் ஒலிவடிவம் சொல். சொல்லின் வரிவடிவம் எழுத்து.

சொல்லை மக்கள் மனத்தில் பதித்து - அது வெளிப்படுத்தும் நல்ல உணர்ச்சிகளாலும், சீரிய சிந்தனைகளாலும் மக்கள் கூட்டத்தை இயக்கி வந்தவன் அன்று 'சொல்லேர் உழவன்' என்றழைக்கப்பட்டான்.

சொல்லை எழுத்தாக்கி - அந்த எழுத்தை ஆழத்தெரிந்தவனே "எழுத்தாளன்"

3. படைப்பாற்றல் :

படைப்பாற்றலின் ஆணிவேர் கற்பனை ஆற்றல். சிந்தனைக்கு அழகு தருவது கற்பனை. கற்பனை இல்லாவிட்டால் உலகில் மனிதன் எதையுமே சுவையுடன் அனுபவிக்க முடியாது.

சிறுகதை - நாவல் - நாடகம் - கவிதை... என எல்லாப் படைப்புக் கலைஞர்களிடமும் இயற்கையாக அமைந்துவிட்ட தனிச்சொத்து இந்த கற்பனை ஆற்றல்.

4. படைப்பாளி :

கற்பனை என்ற ஆவேச உணர்ச்சியிடம் அகப்பட்டுக் கொண்டு - அதைக் காகிதத்தில் பதிய வைக்கும் எழுத்தாளனின் முயற்சியில்...

கற்பனை என்ற கடவுளிடம் வரம் கேட்டுத் துடிக்கும் நேரத்தில்-
கற்பனை என்ற காதலியிடம் கெஞ்சிக் கொண்டிருக்கும் வேளையில்-
கற்பனை என்ற கட்டுக்கடங்காத குழந்தையின் பிடிவாதத்துடன் ஆசிரியன் போராடிக் கொண்டிருக்கும் வேளையில்...

'புதிய உலகத்தையும் - புதிய புதிய மனிதர்களையும் படைப்பதற்காக' எழுத்தாளன் படும் இன்ப வேதனைகளை நாம் காணலாம்.

5. படைப்பாற்றலின் தகுதிகள் :

* வாழ்க்கை அனுபவம் (Experiece of Life)

* கூர்ந்து நோக்கும் ஆர்வம் (Keen Observation)

* கற்பனைத்திறன் (Creativity)

6. சிறுகதை :

தனிமனித வாழ்க்கை அல்லது சமுதாய வாழ்க்கையின் ஒரு குறிப்பிட்ட போக்கை சிறிய அளவில் சுவையோடு பிரதிபலிப்பது 'சிறுகதை'.....இது

ஒரு கதாபாத்திரத்தின் இயல்பை கூறுவதாகவோ - வாழ்க்கையின் ஒரு நிகழ்ச்சியை சுவைபட எடுத்துரைப்பதாகவோ - வாழ்க்கையின் ஒரு சிக்கலை அழகாக அல்லது அழுத்தமாக தீர்த்துவைப்பதாகவோ இருக்கலாம்.

7. நாவல் இலக்கணம் :

வாழ்க்கை எழுத்தாளனுக்குத் தரும் அனுபவக் கலவையே நாவலுக்கான மூலப்பொருள்!

* பெரியதொரு கதைக்கரு (Plot)

* கதைக்கேற்ற பாத்திரங்கள் (Characters)

* இயக்கும் நிகழ்ச்சிகள் (Situations)

* நிகழ்வுக்கான சூழ்நிலைகள் (Locations)

* சூழ்நிலைகளுக்கும் - பாத்திரப் பண்புகளுக்கும் ஏற்ற உரையாடல்கள் (Suitable Dialogues).....

......இவை எல்லாவற்றுக்கும் மேலாக எல்லாவகைப் படைப்பிலும் "ஓர் குறிக்கோள்" வேண்டும்.

நூலின் பெயர் : 'கதைக் கலை' (கட்டுரைகள்)
ஆசிரியர் : திரு. அகிலன்
வெளியீடு : தாகம் - விலை : ரூ.45/-